Thursday, January 3, 2019

Sunday, December 30, 2018

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் சந்திரிக்கா? ஜனவரியில் முக்கிய அரசியல் முடிவு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அல்லது 21 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைக்கும் நடவடிக்கை ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அணியினரை பயன்படுத்தி சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் இணையும் இந்த அணியினரின் உதவியுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்து, அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்திரிக்கா, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக, யார் பதவியை ராஜினாமா செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த திட்டத்திற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மட்டத்தில் கட்சியினரை அழைத்து நிலைப்பாடுகளை உருவாக்கி வருவதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் மிக முக்கியமான அரசியல் முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக வாராந்த சிங்கள பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உதவிகளை கோரி, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு பின்னால் செல்வதால், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது.

தாம் சுதந்திரக் கட்சியில் இருந்து விலக எண்ணவில்லை எனவும் கட்சியை பாதுகாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள் பாடநெறிக்கான 500 புலமைப் பரிசில்கள்


இலங்கை திறந்த பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றில் 2019 -2021 கற்கை வருடத்திற்கான முன்பள்ளி ஆசிரியர் பாடநெறி தொடர்பான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார, உயர் வலய அபிவிருத்தி அமைச்சு 500 புலமைப் பரிசில்களை வழங்க உள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமது பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அலுவலகர்களைச் சந்தித்து அவர்களிடம் அல்லது www.earlychildhood.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி 15.01.2019

மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டடுள்ளன.Saturday, December 29, 2018

"சயந்தனின் டீல்" குறித்து பதிலளிக்கும் சுமந்திரனின் பேட்டியின் ஒரு சிறு பகுதி இரண்டு நிமிடப் பேச்சிலேயே இரண்டு பெரும் பொய்கள்.
வெளிப்பார்வைக்கு உண்மை போன்ற மயக்கம் தரும் வரலாற்று புரட்டுக்கள் அவை.

அதுவும் "எல்லோருக்கும் தெரிந்ததே" என்று அழுத்திக் குறிப்பிட்டு அவரது வரலாற்று புரட்டுக்கு நம்மையும் துணைக்கழைக்கிறார்.

01. புலிகள் தம்மையும் மீறி  தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்களை கொலை செய்தார்களாம்...

புலிகள் தேர்தல் அரசியலை நிராகரித்தது உண்மை. ஆனால் அதற்காக அதில் ஈடுபட்டவர்களைச் சுடவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தமிழர் தேசத்தின் இறைமையை அடகு வைக்க முற்பட்டதும் / எதிரிகளுடன் இணைந்து போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாலுமே சிலர் தண்டிக்கப்பட்டார்கள். அத்தோடு அது கொலை அல்ல தண்டனை - உயிரை விலையாக்கி இரத்தத்தையும் / கண்ணீரையும் சொரிந்தபடி  போராடிக் கொண்டிருக்கும் மக்கள் சார் அறத்தின் வழுவாத நீதி அது.

02. அடுத்து  பேச்சுவார்த்தைக்கு வசதியாக நோர்வே உட்பட பல நாடுகள் கேட்டுக் கொண்டதற்காக எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக கட்சி ஒன்றின் தேவை கருதி கூட்டமைப்பு உருவாக ஏதோ புலிகள் வழி விட்ட மாதிரி கதை விடுகிறார்.

இதுவும் ஒரு வரலாற்று புலுடா.

பேச்சுவார்த்தை என்பது புலிகளை ஒரு சம தரப்பாக அங்கீகரித்து புலிகளுடன் மட்டுமே பேச எழுதப்பட்டதே புரிந்துணர்வு உடன்படிக்கை.

தாய்லாந்து தொடக்கம் நோர்வே வரை நடந்த பல சுற்று பேச்சுக்களில் ஒன்றிலாவது கூட்டமைப்பு,  புலிகள் தவிர்த்து ஒரு பேசும் தரப்பாக கலந்து கொண்டதை சுமந்திரன் சுட்ட முடியுமா?

கூட்டமைப்பு முழுக்க முழுக்க புலிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதை புலிகள் சுயாதீனமாகவே தூர நோக்கில் உருவாக்கினார்கள்.

அதில் பெரும் பங்காற்றிய பலரில் ஒருவரான மாமனிதர் சிவராம் கூட்டமைப்பு உருவாக்கம் பற்றி பேசிய/ எழுதிய குறிப்புக்களையாவது 
சுமந்திரன் செம்புகள் தேடிக் கற்றறிந்து கொள்ள வேண்டும்.
Via Parani Krishnarajani

உயர்தரப்பரீட்சை பெறுபெறுகள் வெளியாகியது!! வடக்கு, கிழக்கில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம் இதோ!!.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித்.

தேசியரீதியில் ஆறாமிடத்தையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்‌ஷனா யாழ்.மாவட்டத்தில் முதன்நிலை.

கொழும்பு இரவு நேர விடுதியில் நடந்தது என்ன? உயிரிழந்தவர் யார்?


கொழும்பு, கொம்பனித்தெருவில் கட்டடம் ஒன்றில் மின்சார லிப்ட் உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த கட்டடத்தின் 9ஆவது மாடியில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.50 மணியளவில், 9 மாடியில் இருந்து இந்த லிப்ட் கீழ் நோக்கி வேகமாக விழுந்துள்ளது. இதில் பயணித்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் CR&FC அணியில் விளையாடும் கோகில சம்மன்தபெரும என்ற ரகர் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பத்தரமுல்லை, தலங்கம வடக்கு பிரதேசத்தை சேர்ந்தவராவார். உயிரிழந்தவர் பிரபலமான ரகர் விளையாட்டு வீரர் என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


காலையிலும் இரவிலும் குளிரான காலநிலை


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியான பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி..!!


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

இதற்கமைய பரீட்சையில் தோற்றியவர்கள் www.doenets.lk மற்றும் www.sooriyanfmnews.lk என்ற இணையத்தளங்களில் பிரவேசிப்பதன் ஊடாக பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களுள் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேநேரம், 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உயிரியல் விஞ்ஞான பாடத்தில் கம்பஹா ரத்னாவெலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சமுது ராஜபக்ஷ முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பௌதிக விஞ்ஞானத் துறையில், கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த சத்துனி ஹன்சனி முதலாம் இடத்தையும், வர்த்தகத் துறையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த கசுன் இந்துரங்க விக்ரமரட்ன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கலைத்துறையில் பாணந்துறை லைஸியம் சர்வதேச கல்லூரியைச் சேர்ந்த டம்யா டீ அல்விஸ் உம்இ பொறியியல் தொழில்நுட்பத்துறையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த பமுதித்த யசஸ் பத்திரனவும் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.

இதேநேரம், உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் துறையில் கம்புறுப்பிட்டிய நரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்துனி பியம்ஸா கொடிப்பிலி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பரீட்சை மீள்திருத்தத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job