Saturday, December 29, 2018

இதனை உங்கள் தம்பி தங்கைகளுக்கு கொண்டு சேர்த்துவிடுங்கள்.




2018 A/L Results வந்திடுச்சு. உங்கள் தம்பி தங்கைகள் நல்ல Results எடுக்காமல் 3S அல்லது அதற்கு மேல் எடுத்தவங்க எனில் அவர்களைத் திட்டாமல் இந்த தகவலை அவர்களுக்கு கட்டாயம் கொண்டு சேருங்கள்.

A/L Results பற்றி கவலைப்படாமல் அடுத்த கட்டம் பற்றி சிந்தியுங்கள்.  அடுத்த கட்டத்தை சிறப்பாக எதிர்கொள்ள 2 வழிகள் உள்ளன. 2 வழிகள் ம் மேற்கொள்ளுங்கள்.

#முதல்_வழி 
"அரச பணி ஒன்றை பெற முயற்சி செய்தல்"

வினா :- எவ்வாறு முயற்சிப்பது.

2019 ஜனவரி தொடக்கம் A/L தகமையுடன் விண்ணப்பம் கோரப்படவுள்ள அரச வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பியுங்கள் விண்ணப்பித்து குறித்த வேலைவாய்ப்பு போட்டிப்பரீட்சைக்கு தயாராகுங்கள்.

குறித்த போட்டிப்பரீட்சைகளுக்கு எவ்வாறு தயாராவது...???

பொதுஅறிவு , நுண்ணறிவு , மொழித்திறன் போன்ற வினாப்பத்திரங்களுக்கு தயார் படல் வேண்டும்.
காலத்தை விரயம் செய்யாமல் புதுவருடத்தில் இருந்து தயாராவது நல்லது.

#இரண்டாவது_வழி.

* பல்கலைக்கழகங்கள் வெளிவாரி பட்டங்களுக்கு விண்ணப்பம் கோருகின்ற பொது விண்ணப்பித்து கற்றல்.
 Ex :- Open university

*SLIATE( Sri Lanka Institute of Advanced Technological Education ) 2019 க்காக விண்ணப்பங்கள் கோரும் போது விண்ணப்பித்துக் கற்றல்.

#Note :- 
மேற்குறித்த இரண்டு வழிகளை யும் பற்றி 01.01.2019  இல் இருந்து சிந்தித்து ,செயற்பட்டு & முயற்சி செய்வீர்களாயின்.

3A எடுத்த உங்கள் நண்பன்/நண்பி University படிப்பு முடித்து வெளியில் வந்து வேலை தேடும் போது.

நீங்கள் 
👉 04+ வருட அரச பணி அனுபவத்தோடு இருப்பீர்கள். 
👉வெளிவாரி பட்டத்தில் 2 வருடங்களை பூர்த்தி செய்திருப்பீர்கள் ( சில வேளை பட்டம் கூட முழுமையாக முடித்திருக்கக்கூடும் )

3A எடுத்த உங்கள் நண்பனை விட நீங்கள் எந்த வகையிலையும் குறைஞ்சு போக மாட்டிங்க. கெத்தா இருக்கலாம்💪💪💪 எல்லாம் உங்கள் இனிவரும் முயற்சியில் தங்கியுள்ளது.

முயற்சியை தொடருங்கள் வெல்லலாம்.

"ஏதும் சந்தேகங்கள் இருப்பின் Chatbox இல் தொடர்பு கொள்க:

நன்றி.
By :Kumaran Sharmama

No comments:

Post a Comment